திருப்பூர் மாவட்டத்தில் மெல்லமெல்ல கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது


திருப்பூர் மாவட்டத்தில் மெல்லமெல்ல கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது
x
தினத்தந்தி 3 Sept 2021 9:39 PM IST (Updated: 3 Sept 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மெல்லமெல்ல கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் மெல்லமெல்ல கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது. நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 100-ஐ நெருங்கியது. 
98 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
பலி இல்லை 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 570-ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 88 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 882-ஆக உள்ளது. 
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 756 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் பலி எண்ணிக்கை 932-ஆக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 63 ஆக இருந்த நிலையில் நேற்று 98 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story