பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.


பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
x
தினத்தந்தி 3 Sept 2021 9:50 PM IST (Updated: 3 Sept 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

திருப்பூர், 
பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 6-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 10-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 பேச்சுவார்த்தை 
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகிற தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் தொடர்பான பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டு, சம்பள தொகை நிர்ணயிக்கப்படுகிறது. 
இந்த நிலையில் கடந்த சம்பள ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் பனியன் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான 5-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று சைமா சங்க அரங்கில் நடைபெற்றது. 
10-ந் தேதி...
இதற்கு பேச்சுவார்த்தை குழு தலைவர் பிரேம் துரைசாமி தலைமை தாங்கினார். இதில் பனியன் உற்பத்தியாளர்கள் சார்பில் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா சங்கம், நிட்மா, சிம்கா சங்கம், டீமா, டெக்மா உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், தொழிற்சங்கங்களான ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ், பி.எம்.எஸ், எல்.பி.எப், எம்.எல்.எப், ஏ.பி.டி. ஆகிய 8 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொழிற்சங்கங்கள் சார்பில் 90 சதவீதம் சம்பள உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 
கடந்த பேச்சுவார்த்தையின் போது 26 சதவீதம் வரை உயர்த்தி தருவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  பேச்சுவார்த்தையில் மேலும் 2 சதவீதம் உயர்த்தி 28 சதவீத சம்பளம் உயர்த்தி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினர் ஒத்துக்கொள்ளாததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 6-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 10-ந் தேதி நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story