102 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
102 மாணவமாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
முத்தூர்
நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட ம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.முரளி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கி.ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
முகாமில் நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சவுமியா, நடமாடும் மருத்துவ குழு டாக்டர் விஜயகுமார் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு 102 மாணவ, மாணவிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் பிரகாஷ், உடற்கல்வி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story