திருச்செந்தூர் அருகே தூய்மை பணியாளர் தற்கொலை


திருச்செந்தூர் அருகே தூய்மை பணியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Sep 2021 4:26 PM GMT (Updated: 2021-09-03T21:56:51+05:30)

தூய்மை பணியாளர் தற்கொலை

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே காயாமொழி அம்மாள்புரத்தை சேர்ந்த பெருமாள் மகன் நாகராஜ் (வயது 24). திருமணம் ஆகவில்லை. இவர் காயல்பட்டினம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். தனது தாய் இறந்து விட்டதால், அதே பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமா கணபதியும், அவருடைய மனைவியும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் குளியலறையில் பூச்சிக்கொல்லி மருந்து வாசனை வீசியது. அப்போது நாகராஜிடம் கேட்கும் போது தான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து நாகராஜை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story