தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Sep 2021 4:39 PM GMT (Updated: 3 Sep 2021 4:39 PM GMT)

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு செய்தார்.
திட்ட பணிகள்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி மழைநீர் வடிகால் திட்ட பணிகள் ரூ.63.87 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலை 7ஏ-ல் செங்குளம் ஓடை பகுதியில் இருந்து மழை காலங்களில் வெள்ள நீரை வடிப்பதற்கு வடிகால் உப்பாறு ஓடையின் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டு 800 மீட்டர் நீளத்துக்கு வடிகால் அமைக்கும் பணிகள், ரூ.69.66 கோடி மதிப்பீட்டில் காலாங்கரை ஓடை, கழுத பாதை ஓடை ஆகிய ஓடைகளில் வரும் மழைநீரை மாற்றுப்பாதையில் கொண்டு செல்லும் பணி, 6 உயர் அழுத்த மின் கோபுரம் பணிகள், ரூ.35.54 கோடி மதிப்பீட்டில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகள், ஸ்டேட் வங்கி காலனியில் இருந்து கடற்கரை வரை ரூ.20.40 கோடி புதிதாக வடிகால் அமைக்கும் பணிகள், ரூ.5 கோடி மதிப்பீட்டில் 26 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைத்து மின்மோட்டார் மற்றும் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
ஆய்வு
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலையில் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நடைபெற்று வரும் அனைத்து திட்ட பணிகளையும் மழை காலத்துக்குள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், செயற்பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story