உடன்குடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


உடன்குடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2021 10:14 PM IST (Updated: 3 Sept 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உடன்குடி:
உடன்குடி அருகே அருணாசலபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மகளிர் அணி அமைப்பாளர் தெய்வக்கனி தலைமையில், துணை அமைப்பாளர் உலகமணி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வங்கிகளில் நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட நிர்வாகி ஸ்டெல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story