மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 70 மில்லி மீட்டர் பதிவு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கடலூர்,
மழை
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. இதனால் கடலூரில் 92.12 டிகிரி வெயில் பதிவானது.
இதற்கிடையில் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10.30 மணியை தாண்டியும் பெய்த வண்ணம் இருந்தது.
இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புவனகிரி, விருத்தாசலம், கொத்தவாச்சேரி, சிதம்பரம், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, தொழுதூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மழை அளவு
இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக வடக்குத்தில் 4.5 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 20.38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
புவனகிரி - 49
குப்பநத்தம் -48.4
மே.மாத்தூர் - 44
விருத்தாசலம் - 38
கலெக்டர் அலுவலகம் -23.4
வேப்பூர் - 22
சிதம்பரம் - 21
அண்ணாமலைநகர் - 20.2
காட்டுமயிலூர் - 20
கடலூர் - 17.4
வானமாதேவி - 14.2
பெலாந்துறை - 13.4
காட்டுமன்னார்கோவில் - 13.3
ஸ்ரீமுஷ்ணம் - 13.1
குடிதாங்கி - 12.5
சேத்தியாத்தோப்பு - 12
பரங்கிப்பேட்டை - 11
லால்பேட்டை - 9
குறிஞ்சிப்பாடி - 8
பண்ருட்டி - 7
லக்கூர் - 6.2
தொழுதூர் -6
கீழசெருவாய் - 6
Related Tags :
Next Story