கடைகளில் திருட்டு


கடைகளில் திருட்டு
x
தினத்தந்தி 3 Sep 2021 5:07 PM GMT (Updated: 2021-09-03T22:37:18+05:30)

இளையான்குடியில் கடைகளில் நடந்த திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளையான்குடி, 
இளையான்குடி சாலை ரோடு பகுதியில் தலைக்கவசம் அணிந்த திருடன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.8 ஆயிரத்தை எடுத்து சென்றுள்ளான். தொடர்ந்து பரமக்குடி செல்லும் சாலையில் உள்ள கடையில் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரத்தை திருடி உள்ளான். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து மர்மநபரை தேடிவருகின்றனர்.

Next Story