தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை


தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை
x

தியாகதுருகம் அருகே கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள வரஞ்சரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட சித்தலூர் கிராமத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது மர்மநபர்கள் சிலர் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 

பின்னர் டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகும் அவர்கள் வயல்வெளி பகுதிகளில் சாராயம் காய்ச்சும் தொழிலை தொடர்ந்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி இரும்பு பேரலில் அடு்ப்பு வைத்து சாராயம் காய்ச்சி வருகின்றனர். ஒரு சிலர் குறைந்த அளவு சாராயத்தை குடிசைத் தொழில் போல வீட்டிலேயே குக்கரில் வைத்து காய்ச்சி குடிநீர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
டாஸ்மாக் கடைகளில் எத்தனை வகையான மதுபானங்கள் கிடைத்தாலும் சாராயத்துக்கென்று தனி பிரியர்கள் இருக்கிறார்கள். 

மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்களை போலீசார் தீவிரமாக வேட்டையாடி வருவதால் கிராமப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவது குடிசை தொழில்போன்று பெருகி வருவது வேதனையாக உள்ளது. எனவே சாராயம் காய்ச்சுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் திருந்தி வேறு தொழில்களை செய்வதற்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருவது குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாராயத்தை ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





Next Story