வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை


வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 3 Sept 2021 10:52 PM IST (Updated: 3 Sept 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

20 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.

காரைக்குடி, 
வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.
கதவு உடைப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் போலீஸ் சரகம் உதயம் நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 70). இவர் உடல் நலக்குறைவின் காரணமாக தனது மனைவியோடு தேவகோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த துரைராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டின் பீரோ மற்றும் லாக்கரில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
விசாரணை 
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தினை காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story