விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sep 2021 6:04 PM GMT (Updated: 2021-09-03T23:34:45+05:30)

லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

உத்தமபாளையம்: 

கூடலூர் அருகே லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு தமிழக-புதுவை வக்கீல் சங்க மாநில துணைதலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் முன்னிலை வகித்தார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்க குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும். மதுரை மக்களுக்கு குடிநீர் தாருங்கள் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மேலும் வைகை அணையை தூர்வாரி மழை காலங்களில் அதிக அளவு தண்ணீரை தேக்கி ஆறு வழியாகவே மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். 


இதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் 10-க் கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story