நாமக்கல்லில் பள்ளி திறக்கப்பட்ட 3-வது நாளே 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று


நாமக்கல்லில் பள்ளி திறக்கப்பட்ட 3-வது நாளே 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 Sept 2021 11:36 PM IST (Updated: 3 Sept 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பள்ளி திறக்கப்பட்ட 3-வது நாளே 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் பள்ளி திறக்கப்பட்ட 3-வது நாளே
(திருத்தம்)5 மாணவிகளுக்கு கொரோனா
2 ஆசிரியைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி
நாமக்கல்:
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளில் 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன. 
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு இருந்தன. மேலும், மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நாமக்கல்லில் 3 மாணவிகள்
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு கடந்த 1-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 
இதையடுத்து பள்ளியில் இருந்த அந்த மாணவி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வகுப்பறை பூட்டுபோட்டு போட்டப்பட்டது.
பின்னர் பள்ளிக்கு வந்திருந்த 224 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 
இதனிடையே பரமத்தியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் பிளஸ்-2 படித்து வந்த 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த 2 மாணவிகளையும் சுகாதாரத்துறையினர் உடனடியாக தனிமைபடுத்தினர். பள்ளியில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மற்ற மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story