மணல் கடத்தலை தடுத்த அண்ணன், தம்பி மீது தாக்குதல்


மணல் கடத்தலை தடுத்த அண்ணன், தம்பி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 3 Sept 2021 11:43 PM IST (Updated: 3 Sept 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே மணல் கடத்தலை தடுத்த அண்ணன்-தம்பி தாக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே மணல் கடத்தலை தடுத்த அண்ணன்-தம்பி தாக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் கடத்தல்

பேரணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி, பத்தலப்பல்லி மலட்டாறுகள், கொத்தப்பல்லி கொட்டாறு பகுதிகளிலும், ஆற்றுப்படுகை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள் மற்றும் விவசாய நிலங்களிலிருந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. மதினாப்பல்லி மலட்டாற்றில் தடுப்பணை அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மசிகம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார். 

அந்த நிலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் மணல் எடுத்து கொண்டிருப்பதாக கந்தசாமியின் மகன்கள் பிச்சையப்பன் (50), இவரது தம்பி சாலைப்பணியாளர் அய்யப்பன் (45) ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து அவர்கள் இருவரும் தங்கள் நிலத்திற்கு சென்று பார்த்த போது பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (45) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி கொண்டிருப்பதை பார்த்தனர்.

மண்வெட்டியால் தாக்குதல்

உடனே மணல் கடத்தலை தடுத்து தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த தேவேந்திரன், தான் வைத்திருந்த மண்வெட்டியால் பிச்சையப்பன், அய்யப்பனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

இதில் படுகாயமடைந்த அண்ணன், தம்பி இருவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து பிச்சையப்பன், ஐயப்பன் ஆகியோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில்  இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை தேடி வருகிறார்.

Next Story