பொன்.ராதாகிருஷ்ணன், ஜி.கே.வாசன் ஆறுதல்


பொன்.ராதாகிருஷ்ணன், ஜி.கே.வாசன் ஆறுதல்
x
தினத்தந்தி 3 Sept 2021 11:45 PM IST (Updated: 3 Sept 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இறந்ததையொட்டி அவருடைய வீட்டிற்கு சென்று முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், ஜி.கே.வாசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

தேனி: 


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவருடைய உடல் பெரியகுளத்தில் உள்ள மயானத்தில் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேற்று வந்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த விஜயலட்சுமியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். 


மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜி.கே.வாசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் பலரும் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Next Story