மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் படுகாயம்
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
குளித்தலை,
கார் மோதல்
குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (17) என்பவருடன் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலைக்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
குளித்தலை-மணப்பாறை சாலையில் உள்ள வை.புதூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 வாலிபர்கள் படுகாயம்
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கார்த்திகேயன் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story