அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,
தகராறு
கரூர் மாவட்டம் மேட்டூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி கொண்டிருந்தார்.அப்போது கரூர் காந்திகிராமம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 வாலிபர்கள் பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கண்டக்டர் சரவணன் அவர்களிடம் கேட்ட பொழுது தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
வாலிபர் கைது
இதனையடுத்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து பெரியார் நகரை சேர்ந்த சேதுபதி (24) என்பவரை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய பாலாஜி, ரிஷி, அக்சையா ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story