வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 6:55 PM GMT (Updated: 2021-09-04T00:25:05+05:30)

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

வெள்ளியணை,
கரூர் தாந்தோன்றிமலை அருகே உள்ள ஏமூர்புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38) விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலையில் எழுந்த முருகேசன் கதவை திறந்து வீட்டிற்கு அருகில் கட்டியிருந்த மாடுகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நைசாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த முருகேசனின் மனைவி நந்தினியின் (28) கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து உள்ளார். இதில் திடுக்கிட்டு எழுந்த நந்தினி திருடன் திருடன் என்று கத்தியுள்ளார். சப்தம் கேட்டு முருகேசன் அங்கு வருவதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story