வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 21). கூலிெதாழிலாளி. இவர் அருகில் உள்ள கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நண்பர்களுடன் கபடி விளையாடினார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடனே நண்பர்கள் அவரை மோட்டார் சைக்கிளில் மீட்டு சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் ஏற்கனவே நிர்மல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.