விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி


விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி
x
தினத்தந்தி 4 Sept 2021 1:06 AM IST (Updated: 4 Sept 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா இந்துக்களுக்கு மிக முக்கியமான திருவிழாவாகும். விநாயகர் சதுர்த்தி விழாவை மற்ற மாநிலங்களில் கொண்டாட தடை விதிக்கவில்லை. தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கிக்கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story