யூனியன் அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்


யூனியன் அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்
x
தினத்தந்தி 4 Sept 2021 1:25 AM IST (Updated: 4 Sept 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

யூனியன் அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து ஊழியர்கள் பணியாற்றினார்கள்.

நெல்லை:
ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நிலையில் கலந்தாய்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவருக்கு தமிழகம் முழுவதும் தொகுப்பூதியம் ஒரே நிலையில் நிர்ணயம் செய்ய வேண்டும். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி உயர்வில் தகுதி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒன்றியத்தினர் நேற்று கோரிக்கை விளக்க அட்டை அணிந்து பணியாற்றினர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 பஞ்சாயத்து யூனியன்களிலும் சுமார் 200 ஊழியர்கள் கோரிக்கை விளக்க அட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

Next Story