கர்நாடகத்தில் ஒரே மாதத்தில் 48 லட்சம் பேருக்கு கர்நாடகத்தில் பரிசோதனை செய்து சாதனை
கர்நாடகத்தில் ஒரே மாதத்தில் 48 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு, சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் நாள்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்நடந்து வருகிறது. இதன்பலனாக தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. குறிப்பாக தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருவதாலும் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநில சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்ததாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கிறது. அதன்படி மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதாவது ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கர்நாடகத்தில் எப்போதும் இல்லாத அளவில் 48 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story