கர்நாடகத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,220 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 19 பேர் இறந்து உள்ளனர். இதுவரை 29 லட்சத்து 53 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 37 ஆயிரத்து 380 பேர் இறந்து உள்ளனர். நேற்று 1,175 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 28 லட்சத்து 97 ஆயிரத்து 254 பேர் குணம் அடைந்து உள்ளனர். 18 ஆயிரத்து 404 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
பெங்களூரு நகரில் 319 பேர், தட்சிண கன்னடாவில் 232 பேர், உடுப்பியில் 150 பேர், மைசூருவில் 86 பேர் உள்பட 1,220 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூரு நகரில் 8 பேர், தட்சிண கன்னடாவில் 4 பேர், உத்தர கன்னடாவில் 2 பேர், பெங்களூரு புறநகர், தார்வார், கோலார், மண்டியா, விஜயாப்புராவில் தலா ஒருவர் இறந்தனர். 22 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story