டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது


டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது
x
தினத்தந்தி 4 Sept 2021 1:55 AM IST (Updated: 4 Sept 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி ‘தீ’ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
டிரான்ஸ்பார்மர் வெடித்தது
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பின்புறம்  புதுப்பள்ளி அருகே நேற்று இரவு 7.45 மணியளவில் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் டிரான்ஸ் பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீ  கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. 
மின் இணைப்பு துண்டிப்பு
இதைக்கண்ட அருகே இருந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீப்பிடித்து விடுமோ? என்ற அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு தங்கள்  வீட்டு மின் இணைப்பை துண்டித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று  டிரான்ஸ்பார்மரில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
பரபரப்பு
 மேலும் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சற்றுதாமதித்து இருந்தாலும் கூட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தீ பரவி பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். உடனடியாக மின் இணைப்பை துண்டித்துதீ அணைக்க பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 
இதைத்தாடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.  இரவு நேரத்தில் மக்கள் நடமாடும் பகுதியில்  இச்சம்பவம் நடைபெற்றதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story