பட்டதாரி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது


பட்டதாரி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Sep 2021 8:39 PM GMT (Updated: 2021-09-04T02:09:02+05:30)

பட்டதாரி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 34). இவருக்கும், ஒரு பட்டதாரி பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு, வேறொருவருடன் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து பாலமுருகன், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த பெண், பாலமுருகன் கடந்த 7 வருடமாக தன்னை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது அவரது ஆசைக்கு இணங்காவிட்டால், இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், அதற்கு பாலமுருகனின் மனைவி சங்கீதாவும் உடந்தையாக இருப்பதாகவும், மருவத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாலமுருகன் மற்றும் சங்கீதா மீது மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story