வாலிபர் கொலை வழக்கில் 9 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டார்
ஆலங்குடி
ஆலங்குடி கல்லுக்குண்டு குளம் பகுதியில் வசித்து வருபவர் துப்பாக்கி முருகன். இவருடைய மூத்தமகன் செல்வகணபதி என்கிற விஜய்(வயது 24). ஆலங்குடி அருகே கலிபுல்லா நகர் பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஜய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விஜயின் தாய் திலகவதி கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஷெரினாபேகம், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ஆலங்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்ராஜா மற்றும் சின்னகண்ணு, போஸ் மகன் வெள்ளைச்சாமி, முருகன் மகன் விமல், நாடிமுத்து மகன் வீரமணி, நடராஜன் மகன் சம்சா கண்ணன், முருகன் மகன் கவுதம், நடராசன் மகன் சூரியா, வீரக்குமார் மகன் தபசு முருகன் ஆகிய 9 பேரை ஆலங்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story