பெங்களூருவில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை - போலீஸ் கமிஷனர் உத்தரவு


பெங்களூருவில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை - போலீஸ் கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 4 Sept 2021 2:27 AM IST (Updated: 4 Sept 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பெங்களூருவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

பெங்களூரு:

பொது இடங்களில் வைத்து...

  வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட கர்நாடக அரசு தடை விதித்து உள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

  விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் சாலைகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அறிவியல் பூர்வமாக...

  கோரமங்களாவில் நடந்த கார் விபத்தில் 7 பேர் மரணம் அடைந்தது ஒரு துயர சம்பவம். இந்த வழக்கை நான் தீவிரமாக எடுத்து உள்ளேன். மேலும் அறிவியல் பூர்வமாகவும் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story