டெம்போ-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி
நாகர்கோவில் அருகே டெம்போவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் அருகே டெம்போவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
என்ஜினீயரிங் மாணவர்
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் மகன் பிராங்கோ ஜெஸ்லின் (வயது 20). இவர் சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இவருடைய நண்பரின் பிறந்த நாள் விழா மாஞ்சான்குடியிருப்பு பகுதியில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக பிராங்கோ ஜெஸ்லின் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை புறப்பட்டார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சிவசேது (20) பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தார்.
பலி
நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து மாஞ்சான் குடியிருப்பு பகுதியில் செல்லும் போது, அந்த வழியாக ஒரு டெம்போ வந்தது. கண் இ்மைக்கும் நேரத்தில் இரண்டும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பிராங்கோ ஜெஸ்லின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவசேது படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் இ்ருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிவசேது சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விசாரணை
இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story