பஸ்சில் பயணியிடம் திருடிய 2 பெண்கள் கைது
வேலூர் அருகே பஸ்சில் பயணியிடம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூர் அருகே பஸ்சில் பயணியிடம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூரை அடுத்த இலவம்பாடி அருகேயுள்ள கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 32).
இவர் வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை ரம்யா பஸ்சில் வேலைக்காக வேலூருக்கு வந்து கொண்டிருந்தார். அவரின் அருகே நின்று கொண்டிருந்த 2 பெண்கள் திடீரென ரம்யா பையில் வைத்திருந்த ரூ.1,000-ஐ நைசாக திருடினார்கள்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் சுதாரித்து கொண்டு திருடி.., திருடி.., என்று சத்தமிட்டார். இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து 2 பெண்களையும் மடக்கி பிடித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் அயோத்திபட்டணத்தை சேர்ந்த விமலா (28), கஸ்தூரி (25) என்பதும், 2 பேர் மீதும் ஈரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், ஆரணி ஆகிய இடங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story