தாராபுரம் அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் செத்தது.


தாராபுரம் அருகே மர்ம விலங்கு கடித்து  4 ஆடுகள் செத்தது.
x
தினத்தந்தி 4 Sep 2021 3:43 PM GMT (Updated: 4 Sep 2021 3:43 PM GMT)

தாராபுரம் அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் செத்தது.

தாராபுரம்
தாராபுரம் அருகே மர்ம விலங்கு கடித்து  4 ஆடுகள் செத்தது.
ஆடுகள் 
தாராபுரம் அருகே உள்ள வீராட்சிமங்கலம்  சிராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர்  5 ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு  கஸ்தூரி வீட்டிற்கு தூங்கச் சென்றார்.  நள்ளிரவு நேரம் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து கஸ்தூரியும், அவருடைய மகனும்   கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது கொட்டகை இருட்டாக இருந்ததால் அங்கு ஆடுகளை கடித்துக்கொண்டிருந்த மர்ம விலங்கு எது என்று தெரியவில்லை. மேலும் பயந்துபோய் கதவுகளை பூட்டிக்கொண்டார்.
 பின்னர் காலை 5 மணிக்கு ஆட்டுக் கோட்டைக்கு வந்து பார்த்தபோது 3 ஆடுகள்  செத்துக்கிடந்தன. ஒரு ஆடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. மேலும் 2கோழிகளும் செத்துக்கிடந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைடுத்து அந்த ஆட்டிற்கு சிகிச்சை அளித்தார் ஆனால் அந்த ஆடும் செத்துவிட்டது.
இழப்பீடு
இந்த  தகவலின்பேரில் வனக்காப்பாளர் நாகராஜ், வன பாதுகாவலர் மகுடபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை  செய்தனர்.  பின்னர் ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர்.
ஆடுகளை பறிகொடுத்த கஸ்தூரி கூறும்போது,இரண்டு ஆண்டு காலமாக வளர்க்கப்பட்ட ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றுவிட்டது. இதனை நம்பி பிழைப்பை நடத்தி வரும் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார். 


Next Story