சனி மகா பிரதோஷம்


சனி மகா பிரதோஷம்
x
தினத்தந்தி 4 Sept 2021 3:47 PM (Updated: 4 Sept 2021 3:47 PM)
t-max-icont-min-icon

சனி மகா பிரதோஷம்

முத்தூர்,
 நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத சனி மகா பிரதோஷ பூஜை நேற்றுமாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி எம்பெருமான் மற்றும் ஜெயங்கொண்டேஸ்வரர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.  விழாவிற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். 

Next Story