தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்


தெரு நாய்களால்  பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 4 Sept 2021 9:21 PM IST (Updated: 4 Sept 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.இதனால் பொதுமக்கள் ரோட்டில் செல்லும்போது தெரு நாய்கள் இருப்பதால் ஒருவகையான அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு செம்மறி ஆடுகள் மற்றும் பொதுமக்களையும் தெரு நாய்கள் கடித்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.     

Next Story