தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு


தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 9 பேர் தேர்வு
x
தினத்தந்தி 4 Sept 2021 9:37 PM IST (Updated: 4 Sept 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சென்னையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

வேலூர்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சென்னையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

நல்லாசிரியர் விருது

முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் (செப்டம்பர் 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களை மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது. 

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், வெள்ளிப்பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவை வழங்கப்படும்.

இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கும்விழா சென்னையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்டம் தோறும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இதில், வேலூர் மாவட்டத்தில் இருந்து 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களின் விவரம் வருமாறு:-

9 ஆசிரியர்கள் தேர்வு

திருமணி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார், செம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன், கிளித்தான்பட்டரை கல்வி உலகம் சிவானந்தம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவவடிவு, சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஜெயந்தி, வேலூர் கஸ்பா நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பிரிஜெட், குடியாத்தம் செதுக்கரை பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கார்த்தி, ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சக்திவேல், மருதவல்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை கவிச்செல்வி, காட்பாடி சிருஷ்டி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Next Story