ஆண்டிப்பட்டி அருகே விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்
ஆண்டிப்பட்டி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
ஆண்டிப்பட்டி:
நாடு முழுவதும் வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை பக்தர்கள் சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இதையொட்டி வீடுகளில் வைத்து பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்றாற்போல் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாலையோரம் கூடாரம் அமைத்து, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தயாரித்த வண்ண, வண்ண சிலைகளை சாலையோரமாக விற்பனைக்காக வைத்துள்ளனர். இதில், கற்பக விநாயகர், செல்வ விநாயகர், வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், சக்தி விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், நவசக்தி விநாயகர், கன்னிமூல விநாயகர் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story