உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை கலெக்டர் ஆய்வு
கந்திலி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை திருப்பத்தூர் கலெக்டர் ேநரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
கந்திலி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை திருப்பத்தூர் கலெக்டர் ேநரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்ைக மையம்
கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை நடக்கும் அறைகள், தேர்தல் அலுவலர்கள் அறை, தேர்தல் கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பு ஆகியவை குறித்து வேட்பாளர்களின் ஏஜென்டுகள், வரும் நுழைவாயில், வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்படும் அறைகள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
அத்தியாவசிய வசதிகள்
தமிழக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பொருட்டு திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,779 கிராம ஊராட்சி வார்டுகள், 208 கிராம ஊராட்சி தலைவர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 13 மாவட்ட ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளை அவசியம் பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கட்டிடங்கள் பழுது ஏற்பட்டு இருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடிநீர் வசதி, மின்சாரம், கழிவறை வசதி ஆகிய அத்தியாவசிய வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டையில் ஆய்வு
அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களான நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செல்வகுமாரன், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story