வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 350 லிட்டர் சாராயம் பறிமுதல்

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 350 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Sept 2021 10:44 PM IST (Updated: 4 Sept 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 350 லிட்டர் சாராயம் பறிமுதல்

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 350 லிட்டர் சாராயம் பறிமுதல் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் சீனிதோப்பு பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாசம் ஆகியோர் தலைமையில் 10 போலீசார் அந்த வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். 

வீட்டில் ஒரு அறையில் லாரி டியூப்பில் நிரப்பி பதுக்கி வைத்திருந்த 350 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப் பொருட்களை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வீட்டில் பதுக்கி வைத்திருந்தது மேட்டுப்பாளையம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 38) என்பவருக்கு சொந்தமான சாராயம் ஆகும்.

இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம், சாராயம், மூலப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவர் மீது வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story