வாக்குப்பெட்டிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு


வாக்குப்பெட்டிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Sept 2021 11:41 PM IST (Updated: 4 Sept 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கடந்த 31-ந் தேதி கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டார். இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஊராட்சி வார்டுகள் 213 ஆகும். 

இந்த ஊராட்சிகளில் 25 ஆயிரத்து 214 ஆண் வாக்காளர்களும், 26 ஆயிரத்து 344 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 51,559 வாக்காளர்கள் உள்ளனர். 

இந்த நிலையில் இன்று காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து காவேரிப்பாக்கம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார். மேலும் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

பின்னர் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட துரைப்பெரும்பாக்கத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமையும் ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர், நெமிலி தாசில்தார் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி, பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story