நல்லாசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு


நல்லாசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு
x
தினத்தந்தி 5 Sept 2021 12:03 AM IST (Updated: 5 Sept 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வித்துறையில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். 

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோடீஸ்வரன், அரக்கோணம் சி.எஸ்.ஐ. அந்திரேயர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் அற்புதராஜ், ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன், ராணிப்பேட்டை காரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பழனி,

 ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தரணிபாய், வாலாஜா மேற்கு ஒன்றியம் திருப்பாற்கடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வீரபத்திரன், திமிரி ஒன்றியம் கணியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, சோளிங்கர் ஒன்றியம் கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் துளசிராமன், 

ராணிப்பேட்டை சிப்காட் சி.எஸ்.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வேணுகோபால், ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் அய்யப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Next Story