கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு


கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 4 Sep 2021 6:34 PM GMT (Updated: 2021-09-05T00:04:16+05:30)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 
ருத்ர கோடீஸ்வரர் கோவில் 
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பழமை வாய்ந்த ருத்ர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சிவபெருமான், நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட  திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்டவைகளால்  அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
வடுவூர் 
வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
நீடாமங்கலம் 
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது காசிவிசுவநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பிரதோஷ நாயகர் பிரகார உலா நடந்தது. நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ  வழிபாடு நடந்தது. 
குடவாசல்
குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது நந்திபகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. .இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நந்திபகவானை வழிபட்டனர். குடவாசல் சத்ரு சம்ஹாரமூர்த்தி கோவில், கோணேஸ்வரர் கோவில்,  திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில், திருவீழிமிழலை வீழிநாதர் கோவில், சீதக்கமங்கலம் மூலநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

Next Story