மனைவியை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியவர் கைது


மனைவியை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2021 12:41 AM IST (Updated: 5 Sept 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் மனைவியை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

நொய்யல்,
குடும்பத்தகராறு
வேலாயுதம்பாளையம் மலைவீதி டி.என்.பி.எல். சாலையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44), எலக்ட்ரீசியன். இவரது மனைவி பிரியா (35). இவர்களுக்கு அபிநயா (15) என்ற மகளும், ஆதித்யா (11) என்ற மகனும் உள்ளனர்.இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் குழாய் எடுத்து பிரியாவை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு கை மற்றும் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
கைது
இதனை அறிந்த பிரியாவின் தாய் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனது மகளை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் பிரியா புகார் அளித்தார். 
இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய ரமேசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story