16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது


16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 5 Sept 2021 12:44 AM IST (Updated: 5 Sept 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை,

16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமிக்கு குழந்தை பிறந்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே ஊரைச்சேர்ந்த 22 வயது வாலிபர் காதலித்தார். கடந்த ஆண்டு அந்த சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கர்ப்பமான அந்த சிறுமிக்கு கடந்த 2.-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சிறுமியின் தாய், அவரை அழைத்துக்கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
வழக்குப்பதிவு
இதையடுத்து குழந்தை பெற்ற பெண்ணின் வயதை கேட்ட மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.பின்னர் அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக அவரது கணவர் மீது நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story