வீடு புகுந்து நகை திருட்டு


வீடு புகுந்து நகை திருட்டு
x
தினத்தந்தி 5 Sept 2021 1:02 AM IST (Updated: 5 Sept 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து நகை திருடப்பட்டு உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் விஜயராமன் (வயது 42). இவர் கடந்த 2-ந்தேதி இரவு தன்னுடைய மனைவி, 2 மகள்களுடன் வீட்டில் தூங்கியுள்ளார். தூங்கும்போது வழக்கம் போல் பின் கதவை திறந்து விட்டு முன் அறையில் படுத்து உள்ளனர்.இந்த நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது பீரோவில் இருந்த 8 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 2 செல்போன்கள் திருடு போய் உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story