மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு தொற்று:


மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு தொற்று:
x
தினத்தந்தி 5 Sept 2021 1:34 AM IST (Updated: 5 Sept 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு தொற்று:

சேலம், செப்.5-
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 59 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
59 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் 19-ந் தேதி முதல் 100-க்கும் குறைவாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 58 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 பேர், சேலம் ஒன்றியத்தில் 26 பேர், ஆத்தூர் பகுதிகளில் 20 பேர், நகராட்சி பகுதிகளில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் பலி
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 88 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 676 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டியும், 67 வயதுடைய முதியவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியாகினர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,636 பேர் பலியாகி உள்ளனர். 
மாவட்டத்தில் 5 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story