பிளஸ்-2 மாணவி கடத்தல்


பிளஸ்-2 மாணவி கடத்தல்
x
தினத்தந்தி 5 Sept 2021 2:01 AM IST (Updated: 5 Sept 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்டாா்.

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, ஒருவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. 
இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நெய்வேலியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு(வயது 22) என்பவர் மாணவியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சந்துருவை போலீசார் கைது செய்தனர். மேலும் பிளஸ்-2 மாணவி மீட்கப்பட்டார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story