புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை


புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Sept 2021 2:57 AM IST (Updated: 5 Sept 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கீழப்பழுவூர்:

முற்றுகை
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் பளிங்காநத்தம் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருச்சி மாவட்டம் புதூர்பாளையத்திற்கு செல்லும் சாலையில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. கடை திறக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே திருச்சி மாவட்டம் புதூர் பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து டாஸ்மாக் கடை முன்பு கூடி முற்றுகையிட்டு, கிராமத்திற்கு சென்று வரும் சாலையில் மதுபானக்கடை இருக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கடையின் முன்பு இருந்த தடுப்புகள், பெயர் பலகை போன்றவற்றை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இட மாற்றம் செய்யப்படும்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், வெங்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்த கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story