பேச்சியம்மன்- பெரியசாமி கோவில் கும்பாபிஷேகம்


பேச்சியம்மன்- பெரியசாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 4 Sep 2021 9:27 PM GMT (Updated: 4 Sep 2021 9:27 PM GMT)

பேச்சியம்மன்- பெரியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் உள்ள பேச்சியம்மன், பெரியசாமி கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 2-ம் கால யாகசாலை பூஜையும், அதைத்தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா பூர்ணாஹூதியும் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசம் புறப்பட்டது. பின்னர் கோவிலின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பேச்சியம்மன், பெரியசாமி ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வெங்கலம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குலதெய்வ வழிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.

Next Story