வணிக நிறுவனங்களில் தாசில்தார் ஆய்வு
வணிக நிறுவனங்களில் தாசில்தார் ஆய்வு
கூடலூர்
கூடலூர் பகுதியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வணிகர்கள், பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா? என்று தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது காளம்புழா அரசு மதுபான கடைகளில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு பலகை இல்லாததை அதிகாரிகள் கண்டனர். உடனே கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடிய பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோன்று வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களிடம் இருந்து ரூ.6,200, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளிடம் இருந்து ரூ.2,400 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story