காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் ரூ.1½ லட்சம் திருட்டு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் ரூ.1½ லட்சம் திருட்டு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Sept 2021 3:07 AM IST (Updated: 5 Sept 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்
மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பணம் திருட்டு
காவேரிப்பட்டணம் அருகே உள்ள செலசனம்பட்டியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 44). ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். இவர் கடந்த 3-ந் தேதி காவேரிப்பட்டணத்தில் உள்ள வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் எடுத்துக்கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
பணத்தை மோட்டார்சைக்கிள் டேங்க் கவரில் வைத்து விட்டு அப்பகுதியிலுள்ள புத்தக கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். 
2 பேருக்கு வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 25 முதல் 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story