அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி சிக்பள்ளாப்பூர் வாலிபர் சாவு


அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி சிக்பள்ளாப்பூர் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 5 Sept 2021 3:25 AM IST (Updated: 5 Sept 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் பெய்து வரும் கனமழைக்கு வெள்ளத்தில் சிக்கி சிக்பள்ளாப்பூர் வாலிபர் இறந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வர உதவும்படி கர்நாடக அரசுக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பெங்களூரு:

தனுஷ்ரெட்டி

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா பொம்மனபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவர் தனுஷ்ரெட்டி(வயது 31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனுஷ்ரெட்டியின் தங்கையும், அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்று இருந்தார். 

அங்கு தனுஷ்ரெட்டியும், அவரது தங்கையும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

பெற்றோர் கோரிக்கை

  இந்த நிலையில் கடந்த புதன்கிழமை வேலை முடிந்ததும் தனுஷ்ரெட்டி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கி கொண்டார். இதில் அடித்து செல்லப்பட்ட தனுஷ்ரெட்டி பரிதாபமாக இறந்தார்.

  அவரது உடல் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தனுஷ்ரெட்டி இறந்த தகவல் சிக்பள்ளாப்பூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும் அமெரிக்காவில் உள்ள தனுஷ்ரெட்டியின் உடலை இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு தனுஷ்ரெட்டியின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story