முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பிரபாகரன் .இவரது மனைவி ஜெனிதா (வயது 40). நேற்றுமுன்தினம் ஜெனிதா வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், கோவில் பிள்ளை, முத்து, பிரபா, விமல் (30), ராஜன் ஆகிய 6 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு உருட்டுக்கட்டையால் அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஜெனிதா புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விமலை கைது செய்தனர். ேலும் தப்பி ஓடிய மேற்கண்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அதே போல் திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (26). நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வன் புல்லரம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (23), அவரது சகோதரர் பிரவீன் காந்த் ஆகிய 2 பேரும் இரும்பு கம்பியால் தமிழ்ச்செல்வனை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் காயமடைந்த தமிழ்செல்வன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ளார் பிரவீன்காந்தியை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story