கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2021 5:26 PM IST (Updated: 5 Sept 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது ஆற்காடு பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.

 அதில், அவர் வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்த மணிமாறன் (வயது 35) என்றும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story